- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நவம்பரில் அதை சொன்னதுக்காக நன்றி ரோஹித்.. என்னைக்கும் இதுக்காக விளையாடாதீங்க.. டிராவிட் ஃபேர்வெல் ஸ்பீச்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர்.

அதே போல ஜாம்பவான் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சிளர் பதவியில் இருந்து விடை பெற்றார். ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்ல முடியாத அவர் தற்போது பயிற்சியாளராக 2007 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சாம்பியன் பட்டம் வென்று விடை பெற்றுள்ளார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையுடன் தாம் விடை பெறலாம் என்று நினைத்ததாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித்துக்கு நன்றி:
ஆனால் அப்போது ரோகித் சர்மா தான் தம்மை 2024 வரை பயிற்சியாளராக செயல்பட சம்மதிக்க வைத்ததாக தெரிவிக்கும் அவர் சாதனைகளை விட உலகக் கோப்பை வெற்றி தான் எப்போதும் பேசப்படும் என்று கூறியுள்ளார். எனவே அதற்காக அனைவரும் விளையாடுமாறு கூறும் அவர் விடை பெறுவதற்கு முன்பாக இந்திய வீரர்களிடம் பேசியது பின்வருமாறு.

“பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் இந்த அற்புதமான நினைவில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுடைய கேரியரில் எடுக்கும் ரன்கள், விக்கெட்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது போன்ற நினைவுகளை தான் வைத்திருப்பீர்கள். எனவே இதை விட உங்களுக்காக நான் பெருமைப்பட முடியாது. நீங்கள் போராடி கம்பேக் கொடுத்த விதம் அற்புதமானது”

- Advertisement -

“ஒரு அணியாக நாம் செயல்பட்டது அற்புதமானது. சமீப காலங்களாக வெற்றியை நெருங்கியும் தொட முடியாததால் ஏமாற்றங்கள் இருந்தது. ஆனால் தற்போது நம் வீரர்களும் பயிற்சியாளர்களும் செய்த சாதனைக்காக மொத்த நாடும் பெருமைப்படுகிறது. மிகவும் நன்றி ரோஹித் சர்மா. நீங்கள் நவம்பர் மாதம் எனக்கு ஃபோன் செய்து தொடர்ந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டீர்கள்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை வெற்றிக்கு பின்னர் ரோஹித் மற்றும் கோலியை சேர்த்து – ரோஹித் சர்மாவின் அம்மா போட்ட போஸ்ட்

“எனவே ரோகித் சர்மா மற்றும் உங்கள் அனைவருடன் வேலை செய்ததை கௌரவமாக நினைக்கிறேன். உங்களுடைய நேரத்திற்கு நன்றி. ஒரு கேப்டன் பயிற்சியாளராக நாம் நிறைய பேசியுள்ளோம் என்பது எனக்கு தெரியும். அதில் ஒற்றுமையான மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பது புத்திசாலித்தனமானது” என்று கூறினார்.

- Advertisement -