அதுக்காக நன்றி சொல்றேன்.. ரோஹித் மட்டும் கூப்பிடாம போயிருந்தா இது நடந்துருக்காது.. டிராவிட் பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி மும்பையில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த சரித்திர வெற்றிக்கு பின் நாடு திரும்பிய இந்திய அணியினர் முதலில் பிரதமரை சந்தித்தனர்.

அவரிடம் வாழ்த்து பெற்ற பின் மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் திறந்தவெளியில் பேரணியாக வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். குறிப்பாக கடற்கரை சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து தங்களுடைய சாம்பியன்களை வரவேற்றனர். அந்த அன்பை ஏற்றுக்கொண்டு ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடிய இந்திய அணியினர் அங்கிருந்து மும்பை வான்கடே மைதானத்திற்கு சென்றனர்.

- Advertisement -

டிராவிட் நன்றி:
அங்கு பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 125 கோடி ரூபாய் பரிசு தொகை இந்திய அணிக்கு வழங்கப்பட்டது. அந்த விழாவில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் பேசினார்கள். அதே போல வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று விடைபெறும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் பேசினார்.

அப்போது 2023 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளராக ஓய்வு பெறவிருந்த தம்மை 2024 வரை பணிபுரிய சொன்னதற்காக ரோஹித் சர்மாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதுவே தற்போது தமக்கு உலகக்கோப்பை வெற்றியை கொடுத்ததாக தெரிவித்த டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “50 ஓவர் உலகக் கோப்பை முடிந்ததும் இந்த பணியில் தொடர்வேனா என்பது உறுதியாக இல்லாமல் இருந்தேன்”

- Advertisement -

“அந்தத் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடியும் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் ஏமாற்றத்தை சந்தித்தோம். அப்போது ரோஹித் சர்மா ஃபோனை எடுத்து “ராகுல் பாய் இன்னும் ஒரு முறை 6 – 8 மாதத்தில் முயற்சி செய்வோம். இப்போது ஒன்றாக முயற்சிப்பது நன்றாக இருக்கும்” என்று கூறினார். எனவே அதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். ஏனெனில் அதனாலயே இந்த சிறப்பான வீரர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது”

இதையும் படிங்க: உணர்ச்சியால் பொங்கிய வான்கடே மைதானம்.. விராட் கோலி தலைமையில் இந்திய அணி செய்த வெறித்தனம்

“அத்துடன் பார்படாஸ் நகரிலும் இங்கேயும் நான் அனுபவித்த அனுபவம் கிடைத்தது. எனவே உண்மையில் என் வாழ்நாளில் வந்த அந்த அற்புதமான மொபைல் அழைப்புக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். தற்போது இந்த அன்பை நான் தவற விட போகிறேன். இந்தியாவுக்கு வந்தது முதல் ரசிகர்கள் மற்றும் மக்களின் அன்பை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரசிகர்களாலேயே இது உலகின் அற்புதமான விளையாட்டாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement