கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியானது அறிமுக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
டி20 உலககோப்பையை ஜெயிக்க ரோஹித் தான் காரணம் : ராகுல் டிராவிட்
இப்படி இரண்டாவது முறையாக இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றியது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அடுத்த 2026 உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணியின் கைப்பற்றும் என்ற நம்பிக்கையையும் வழங்கியுள்ளது. அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற ரோஹித் சர்மாவின் சுயநலமற்ற அதிரடியான அணுகுமுறைதான் காரணம் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் இந்திய அணிக்குள் பயிற்சியாளராக வந்ததிலிருந்து தொடர்ச்சியாக ரோகித் சர்மாவுடன் பேசி வந்தேன். டி20 போட்டிகளில் இன்னும் அதிரடியான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அந்த வகையில் அதை தானே கையிலெடுத்த ரோஹித் சர்மா துவக்க ஓவர்களின் போதே அதிரடியாக விளையாடி மிகச் சிறப்பான துவக்கத்தை வழங்கினார்.
அவர் ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்த அதிரடியான துவக்கம் இந்திய அணியை அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்தது. கடந்த உலக கோப்பை தொடரை பொருத்தவரை ரோகித் சர்மாவின் சுயநலமாற்ற ஆட்டம் தான் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வரை செல்ல காரணம் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இது என்னடா புதுசா இருக்கு? கம்பேக் கொடுத்த போட்டியில் ஜெர்சியால் கவனத்தை ஈர்த்த பண்ட் – என்ன நடந்தது?
மேலும் வீரர்களிடம் உள்ள திறன்களை சரியாக புரிந்து கொண்டு அணியின் சூழ்நிலையும் அற்புதமாக மாற்றியவர் ரோகித் சர்மா என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



