இவர் மட்டும் பின்வரிசையில் இறங்காமல் டாப் ஆர்டரில் இறங்கியிருந்தால் அடித்து நொறுக்கியிருப்பார் – டிராவிட் புகழாரம்

Rahul
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் ஓய்வை அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உலகின் தலைசிறந்த பீல்டருமான ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சியளித்தார்.

Raina-5

- Advertisement -

தோனியுடன் இந்த பயணத்தை தொடர விரும்புகிறேன் என்று ரசிகர்களின் வருத்தத்தை இரட்டிப்பாக்கும் வகையில் அவரும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வர தற்போது ரெய்னா குறித்து ராகுல் டிராவிட் பேசிய வீடியோ ஒன்றினை பிசிசிஐ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் அவர் கூறியதாவது : 2004-2005 ஆம் ஆண்டு ரெய்னா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சிறப்பாக விளையாடினார். அப்போது அவர் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என நான் கருதினேன். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணி பெற்ற பல வெற்றிகளிலுயும், நினைவு கூறத்தக்க நிகழ்வுகளிலும் ரெய்னாவின் பங்கு அளப்பரியது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது பங்கு அபாரமாக இருந்தது.

Raina

அதே போல பீல்டிங்கில் ரெய்னாவின் பங்கு என்பது அளப்பரியது. களத்தில் அவரிடம் வெளிப்படும் ஆக்ரோஷம், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் காதல் உள்ளிட்டவை ரசிக்கத்தக்கதாக இருந்துள்ளன. இந்திய அணிக்காக அவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இங்கே அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்து சாதனை நிகழ்த்தியவர் என்று ரெய்னாவின் புகழை டிராவிட் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

மேலும் இவருக்கு பின்வரிசையில் அளித்த வாய்ப்பை முன்வரிசையில் வழங்கியிருந்தால் இன்னும் நிறைய சாதனைகளை செய்திருப்பார். ஏனெனில் சி.எஸ்.கே அணிக்காக ரெய்னா அதைத்தான் செய்து காட்டியுள்ளார். சி.எஸ்.கே அணிக்காக 3 ஆவது வீரராக களமிறங்கிவரும் ரெய்னா சிறப்பாக விளையாடியுள்ளார் என்று டிராவிட் கூறினார்.

Raina

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருபக்கம் அனைவரும் தோனியை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது டிராவிட் ரெய்னா குறித்த இந்த கருத்தை பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் இந்தப் பதிவை ரெய்னாவிற்கு புகழாரம் செலுத்தும் வகையில் அதிக அளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement