போன முறை மாதிரி இந்த முறை ஈஸியா இருக்காது. கொஞ்சம் பத்திரமா விளையாடுங்க – டிராவிட் எச்சரிக்கை

Rahul
- Advertisement -

இந்திய அணி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது

indvsaus

- Advertisement -

சொல்லப்போனால் இந்த தொடரின் போது அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தடை காலத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் மாதம் மீண்டும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

கடந்த முறை ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் இல்லை. ஆனால் இந்த முறை இந்த இருவரும் மீண்டும் அணிக்குள் வருகின்றனர். அதனை தாண்டி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் பெற்றுள்ளது. இதனால் இந்த முறை இந்திய அணிக்கு இந்த தொடர் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

warnersmith

இது குறித்து பேசியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் :
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த வருட இறுதியில் நடைபெறும் டெஸ்ட் தொடர் மிகச்சிறந்த தொடராக இருக்கும். சென்ற முறை இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் வைத்து வெற்றி பெற்றதால் இந்த முறை கடும் போட்டியுடன் விளையாடுவார்கள்.

- Advertisement -

இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பி விட்டதால் அந்த அணி தற்போது முழு பலத்துடன் இருக்கிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இந்த முறை இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் அணிக்கு திரும்பி விட்டதால் பேட்டிங்கில் பிரச்சனை இருக்காது. பந்துவீச்சு சொல்லவே தேவையில்லை.

Warner

அதேநேரத்தில் இந்திய அணியும் சிறந்த அணியை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறது .இந்த தொடர் சென்ற தொடர் போன்று இருக்காது எனவும் இந்திய வீரர்களை எச்சரிக்கையாக செயல்படும் படியும் கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

Advertisement