எல்லோரும் உஷாரா இருங்க. அக்டோபர் மாசம் இருக்கு உங்களுக்கு பிரச்சனை – இந்திய வீரர்களை எச்சரித்த டிராவிட்

Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பிரமாண்டமான ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர், அக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. கடந்த 5 மாதங்களாக இழுபறியில் இருந்த இந்த ஐபிஎல் தொடர் தற்போது நடக்கப் போவது உறுதியாகி உள்ளது.

ipl

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் மற்றும் நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சுமார் 4,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், இங்கே நிர்வாக காரியங்களை சரியாக செய்ய முடியாத காரணத்தாலும் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது.

மேலும் கிட்டதட்ட நூற்றுக்கணக்கான வீரர்களையும், தொழில்நுட்ப குழுவினரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் அழைத்து வருவது என்பது மிகப் பெரிய காரியம். இந்த பெரிய விஷயத்தில் தவறு நடக்கலாம், பலருக்கு வைரஸ் தொற்றுக்கள் ஏற்படலாம்.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

கொரோனா வைரஸ் விவகாரத்தில் இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த தொற்றும் ஏற்படவில்லை. ஆனால் இனிமேல் வரும் நாட்களில் அப்படி இருக்காது. உள்ளூர் போட்டிகள் அனைத்தும் மார்ச் மாதத்திற்கு முன்பே முடிவடைந்துவிட்டது. இது மிகப்பெரிய நல்ல செய்தி. இதன் காரணமாகத்தான் பலருக்கும் இந்த வைரஸ் தொற்றவில்லை.

Ind

ஆனால் வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட். அதனால் அந்த காலகட்டத்தில் இந்திய அணியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று இந்திய வீரர்களை அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement