இதுமாதிரி ஏமாற்றுக்காரர்களால் இந்திய கிரிக்கெட்டின் ஆரோக்கியத்தை கெடும் – டிராவிட் பேட்டி

dravid
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இந்திய ஏ அணியின் முதன்மை பயிற்சியாளராக பதவி வகித்து வருகிறார்.

rahul-dravid

- Advertisement -

இந்நிலையில் அவர் நேற்று தனியார் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கிரிக்கெட்டின் ஆரோக்கியம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை பயிற்றுவிப்பதில் இந்தியா தற்போது சிறப்பாக விளங்கி வருகிறது. அந்தந்த மாநிலத்திலும் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள்.

மேலும் அவர்களுக்கான பயிற்சியும் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது .அவர்கள் இந்திய அணியில் இடம் பெற தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியும் பெற்று வருகிறார்கள். அவர்களின் கடின உழைப்புக்கு நிச்சயம் தகுந்த பரிசு கிடைக்கும் மேலும் இது போன்று உருவாகும் வீரர்கள் தற்போது வயதை மாற்றி சொல்லி தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அது போன்று செய்வது தவறு.

rahul-dravid

உண்மையான வயதை மறைக்காமல் திறமையாக செயல்பட்டு வாய்ப்பைப் பெற வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வயதை மாற்றி இந்திய அணியில் இடம்பெற நினைப்பது ஒரு ஏமாற்றுத்தனம் ஆகும். இந்த ஏமாற்றத்தால் இந்திய அணியின் ஆரோக்கியம் நிலைகுலையும். எனவே சரியாக பயிற்சியை மேற்கொள்ளுங்கள் உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள் நிச்சயம் உங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று டிராவிட் கூறினார்.

Advertisement