2023 உ.கோ கிடையாது.. இந்தியாவின் பயிற்சியாளராக என்னோட கேரியரில் அதான் லோயஸ்ட் பாய்ண்ட்.. டிராவிட் ஆதங்கம்

Rahul Dravid 6
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். ஒரு வீரராக கிட்டத்தட்ட சச்சினுக்கு நிகராக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ள அவர் உலகக் கோப்பையை மட்டும் வென்றதில்லை.

இருப்பினும் தற்போது பயிற்சியாளராக அவர் உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக விடை பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. முன்னதாக ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்ட காலங்களில் இந்தியா 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பைகளில் தோல்வியை சந்தித்தது. அதை விட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் ஒரே வருடத்தில் இந்தியா தோற்றது.

- Advertisement -

லோயஸ்ட் பாய்ண்ட்:
ஆனால் அவற்றையெல்லாம் விட கடந்த 2021 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றதே பயிற்சியாளராக தம்முடைய கேரியரில் மோசமான புள்ளி என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இழந்தது என்னுடைய கேரியரின் லோயஸ்ட் பாயிண்ட் என்று சொல்வேன்”

“ஏனெனில் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் வென்ற பின் 2, 3வது போட்டிகளில் விளையாடினோம். நாங்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே அப்போது தொடரை வெல்வதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அத்தொடரில் காயமடைந்த ரோஹித் சர்மா போன்ற சில சீனியர் வீரர்கள் இல்லை”

- Advertisement -

“ஆனால் கடைசி 2 போட்டிகளிலும் நாங்கள் வெற்றியை நெருங்கினோம். எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. நாங்கள் கணிசமான இலக்கை நிர்ணயித்து வென்றிருக்க வேண்டும். ஆனால் 4வது இன்னிங்ஸில் சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா நன்றாக விளையாடியது. அந்த வகையில் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றும் கடைசியில் வெல்ல முடியாமல் போன அந்த தொடர் பயிற்சியாளராக என்னுடைய கேரியரில் லோயஸ்ட் பாயிண்ட் என்று சொல்வேன்”

இதையும் படிங்க: தோனி போல ஸ்டைல் காமிக்க நினைத்து சொதப்பிய ரிஷப் பண்ட்.. இந்திய ரசிகர்கள் விளாசல்.. நடந்தது என்ன?

“இருப்பினும் அந்தத் தொடரில் எங்களுக்கு நிறைய பாடங்கள் இருந்தது. அணியாக நிறைய கற்றுக் கொண்டோம்” என்று கூறினார். முன்னதாக அந்தத் தொடருக்கு பின்பு தான் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை சர்ச்சைக்குரிய முறையில் ராஜினாமா செய்தார். அத்தொடரில் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றது. ஆனால் 2வது போட்டியில் அவர் காயமடைந்ததை பயன்படுத்தி இந்திய அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement