
ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு விராட் கோலி, ராகுல், கேப்டன் பும்ரா ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி முக்கிய பங்காற்றினார்கள்.
அவர்களுக்கு நிகராக இளம் வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இத்தனைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் இப்போது தான் அவர் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார். இந்நிலையில் கடினமான ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலேயே நிறைய இந்திய வீரர்கள் இப்படி சதம் அடித்ததில்லை என்று அவரை ஜாம்பவான் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். அத்துடன் ஜெயஸ்வால் இன்னும் சிறப்பாக முன்னேறி பெரியளவில் வளர்வார் என்றும் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் தம்முடைய பலத்தை அடிப்படையாக வைத்து செய்கிறார். அவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானவர் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. அந்தளவுக்கு அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் விளையாடி நீண்ட காலமாகவில்லை. இப்போது தான் துவங்கியுள்ளார்”
“ஆஸ்திரேலியாவுக்கு சென்று பெர்த் மைதானத்தில் முதல் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் போன்றவர் வெற்றி பெற வேண்டும் என்ற பசி, ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். எனவே அவர் இன்னும் முன்னேற்றத்தை மட்டுமே சந்திப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 27 கோடிக்கு வாங்கப்பட்டும்.. 2008 தல தோனியை முந்த முடியாத ரிஷப் பண்ட்.. சுவரசிய பதிவு
அந்த வகையில் ஜெயஸ்வால் இதுவரை 15 போட்டிகளில் 1568* ரன்களை குவித்துள்ளார். அந்த 15 போட்டிகளில் 2 இரட்டை சதத்தையும் 2 சதத்தையும் அடித்துள்ள அவர் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் (34) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். அதன் காரணமாக ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் அவர் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.