டிராவிஸ் ஹெட் பேட்டை 15 டைம் தோற்கடிச்சோம்.. 2023 தோல்வி 2024 வெற்றிக்கான வித்யாசம் பற்றி ட்ராவிட் 

Rahul Dravid 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 10 வருடங்கள் கழித்து ஒரு வழியாக ஐசிசி கோப்பையை வென்றது. ஆம் கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றிருந்தது. அதன் பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் பெரும்பாலும் நம்பர் ஒன் இடத்தில் ஜொலித்து வருகிறது.

ஆனால் ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் சொதப்பி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வெற்றி தோல்வி:

இருப்பினும் அதற்காக அசராத இந்தியா கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றது. அந்த வெற்றி கடந்த 10 வருடங்களாக சந்தித்த தோல்வியிலிருந்து இந்திய ரசிகர்களை மீட்டெடுத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்த ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட் பேட்டை 15 முறை இந்திய பவுலர்கள் ஃபீட் (தோற்கடித்தாக) பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரில் சூரியகுமார் யாதவ் ஒரு சில இன்ச்களில் கேட்ச் பிடித்தது வெற்றிக்கு காரணமானதாக டிராவிட் கூறியுள்ளார். எனவே எவ்வளவு தான் திறமை இருந்தாலும் ஐசிசி தொடர்களில் வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுவதாக டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி 2024 சியட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வெற்றி எனும் அதிர்ஷ்டம்:

“எதுவாக இருந்தாலும் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் டிராவிஸ் ஹெட் பேட்டை நாங்கள் 15 முறை ஃபீட் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இருப்பினும் அவர் பந்தை தொடவில்லை. சில நேரங்களில் அது போன்ற விஷயங்கள் உங்கள் வழியில் செல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் உங்களுடைய செயல்முறையை தொடர வேண்டும். அதைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைத்தது”

இதையும் படிங்க: 12 வருசத்துல ஒன்னு தான்னு நினைக்காதீங்க.. நாங்க விட்டதை இந்திய பசங்க செய்றாங்க.. டிராவிட் பெருமிதம்

“நாங்கள் செய்த பல விஷயங்களைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் கிடைத்தது. இருப்பினும் சில நேரங்களில் நீங்கள் அனைத்து செயல்முறையும் சரியாக செய்ய வேண்டும் என்று உணர்வீர்கள். ஆனால் நாளின் இறுதியில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. சில நேரங்களில் வெற்றி என்பது திறமையை பொறுத்திருக்கும். அதை பெறுவதற்கு வெற்றிக்கோட்டுக்கு ஒரு இன்ச் முன்பாக காலை வைத்திருக்க வேண்டிய ஒரு பையன் எங்களுக்கு தேவைப்பட்டார்” என்று கூறினார்.

Advertisement