ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 38 போட்டிகளில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார்.
அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் தோனியின் சாதனையை அவர் சமீபத்தில் சமன் செய்திருந்தார். சொல்லப்போனால் தோனி 90 போட்டிகளில் அடித்த 6 சதங்களை அவர் 38 போட்டிகளிலேயே அடித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆகிய வெளிநாடுகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும் தோனியால் முடியாத சாதனையை அவர் செய்துள்ளார்.
சிறந்த டிராவிட்:
குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் 89* ரன்கள் குவித்த அவர் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மறக்க முடியாத சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த சூழ்நிலையில் 2003 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 233, 72 ரன்கள் குவித்த ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அது ரிஷப் பண்ட் அடித்த 89* ரன்களை விட ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஒரு இந்தியரின் சிறந்த இன்னிங்ஸ் என்று ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அது பற்றியும் ரிஷப் பண்ட் பற்றியும் ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு. “அந்த இன்னிங்ஸை என்னுடைய இன்னிங்ஸ் வீழ்த்துவது கடினம். அப்போட்டியில் ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். காபாவில் சேசிங் செய்கையில் அவர் 89 ரன்கள் அடித்ததை பார்த்தது சிறப்பானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அழுத்தத்தின் கீழ் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் உண்மையில் பரபரப்பானது”
தோனி போல பண்ட்:
“அந்த வகையில் அவர் என்ன ஒரு ஸ்பெஷல் கிரிக்கெட்டாக செயல்பட்டு வருகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை வாத்து தண்ணீரில் நீந்துவது போல எடுத்துக் கொண்டுள்ளார். எம்எஸ் தோனி சென்ற பின் யாராவது ஒருவர் வந்து அவரது இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுனீர்கள். இங்கே தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பியுள்ளார் என்று நான் சொல்லவில்லை”
இதையும் படிங்க: பாண்டியா நம்பர் ஒன்.. ஒரே நாளில் 69 இடங்கள் முன்னேறி மாஸ் காட்டிய திலக்.. சாம்சன் முன்னேற்றம்
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய செயல்பாடுகள் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்ப முடியாது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் தம்முடைய வழியில் ஸ்பெஷல் வீரராக உருவெடுத்து வருவதாக அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



