நல்லவேளை ரிட்டையராகிட்டேன்.. இல்லனா ஆடக்கூடாதுன்னு சொன்னதை பசங்க கலாய்ச்சுருப்பாங்க.. டிராவிட் கலகலப்பு

Rahul Dravid
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். ஒரு வீரராக சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 1000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளின் பங்காற்றியுள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை வெல்லாதது மட்டுமே அவருடைய கேரியரில் குறையாக இருந்தது.

குறிப்பாக ராகுல் டிராவிட் 2007 உலகக் கோப்பையில் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இம்முறை அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக டி20 உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக விடைபெற்றார். அவரை இந்திய வீரர்கள் சச்சினை போலவே தோளில் தூக்கி பாராட்டி வழியனுப்பினர்.

- Advertisement -

வெறித்தமான டிராவிட்:

முன்னதாக டி20 உலகக் கோப்பையை கைகளில் தூக்கிய டிராவிட் தம்முடைய கேரியரில் அடக்கி வைத்திருந்த மொத்த ஆசையும் வெறியும் தீரும் அளவுக்கு வெறித்தனமாக கத்தி கொண்டாடியது ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் எப்பேர்பட்ட வெற்றிகளை பெற்றாலும் அதற்காக அதிகமாக கொண்டாடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென தமது மகன்களிடம் கூறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதையும் தாண்டி டி20 உலகக் கோப்பையை தாம் வெறித்தனமாக கொண்டாடியதாக ட்ராவிட் கூறியுள்ளார். எனவே தம்மை கிண்டலடிப்பார்கள் என்பதால் அதை மகன்களிடம் காட்ட மாட்டேன் என்று டிராவிட் கலகலப்பாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒன்றாக ஏதாவது செய்ய பாட்டுப்பட்டும். அதன் முடிவில் வெற்றி கிடைக்கும் போது அது போன்ற தருணங்கள் வருகின்றன”

- Advertisement -

மகன்களிடம் காட்ட மாட்டேன்:

“அதை கொண்டாடுவது அருமை. இருப்பினும் அதற்காக நான் பைத்தியமாகி விட்டேனா என்பது போல் கொண்டாடினேன். எனவே அதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஏனெனில் முடிவுகள் மேலே கீழே சென்றாலும் நாம் எப்போதும் நம்முடைய சமநிலையை கடைபிடித்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் நான் கூறியுள்ளேன்”

இதையும் படிங்க: டேவான் கான்வேவிற்கு 33 வயதாகிவிட்டது.. அதனால் ரச்சின் ரவீந்திரா தான் – சி.எஸ்.கே அணி எடுத்துள்ள முடிவு

“நல்ல வேளையாக அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருந்தது. இல்லையெனில் “நீங்கள் ஒன்று சொன்னீர்கள். ஆனால் வேறு ஒன்றை செய்துள்ளீர்கள்” என்று எனது பையன்கள் என்னிடம் கூறுவார்கள்” எனக் கூறினார். மேலும் கிரிக்கெட்டர்கள் தோல்விகளை சந்தித்தால் தான் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு வெற்றி பெற முடியும் என்று டிராவிட் தெரிவித்தார். எனவே வீரர்கள் வெற்றியை தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement