- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. வெளியேறிய ராகுல் டிராவிட் குறித்து ரோஹித் சர்மா – வெளியிட்ட பதிவு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராகுல் டிராவிட் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் தனது பதவியில் இருந்து வெளியேறினார். தனது குடும்பத்துடன் நேரத்தை கழிக்கவே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தால் அவரின் அந்த முடிவுக்கு மதிப்பு அளித்து பி.சி.சி.ஐ அவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டது.

நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரில் வெற்றியுடன் வெளியேறிய ராகுல் டிராவிடுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் குறித்து அணியின் கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான பதிவு ஒன்றினை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : என் இனிய சகோதரர் ராகுலுக்கு, என்னுடைய உணர்ச்சிகளை சரியான வார்த்தையை பயன்படுத்தி வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ இந்த பதிவில் நான் அதை முயற்சி செய்திருக்கிறேன்.

என் சிறு வயதில் இருந்து பல கோடி மக்களைப் போன்று நானும் உங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அது மட்டும் இல்லாமல் தற்போது உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். இந்த விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த நட்சத்திரமாக விளங்கினீர்கள்.

- Advertisement -

நீங்கள் பேட்ஸ்மேனாக என்ன சாதனை படைத்தீர்களோ அதை எல்லாம் வெளியில் வைத்து ஒரு பயிற்சியாளராக எங்களுடன் வந்து கைகோர்த்தீர்கள். உங்களது குணத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த டி20 உலக கோப்பை என்பது உங்களுக்கான பரிசு.

இதையும் படிங்க : என்னோட புக்ல இப்போவே அவர் லெஜெண்ட் தான்.. பும்ராவின் பலமே இது தான்.. ரமீஸ் ராஜா பாராட்டு

கிரிக்கெட் மீது நீங்கள் எவ்வளவு காதல் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களிடம் இருந்து நான் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்களுடன் பணியாற்றிய அந்த நிகழ்வுகளை நான் என்றும் மறக்க மாட்டேன் என ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -