- Advertisement -
ஐ.பி.எல்

வெளியேறப்போகும் குமார் சங்கக்காரா.. உள்ளே வரப்போகும் ராகுல் டிராவிட் – ராஜஸ்தான் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் சீசன் குறித்த ஏற்பாடுகள் துவங்க ஆரம்பித்துவிட்டன. அதன் முதற்கட்டமாக ஐ.பி.எல் மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.

இந்த ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன்னதாகவே தங்களது அணிகளை சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்த பதவியில் இருந்து நீக்கியது.

- Advertisement -

அந்தவகையில் அடுத்த மாற்றமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான குமார் சங்கக்காரா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது பதவிக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளரான மேத்யூ மோட் அண்மையில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரான குமார் சங்கக்காராவை இன்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மாற்ற பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் இன்னும் இதுகுறித்து சங்கக்கராவிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை என்றாலும் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்காராவை அணுகினால் நிச்சயம் அவரும் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பயிற்சியாளராக சர்வதேச கிரிக்கெட் வேண்டாம்.. ஐ.பி.எல் மட்டுமே போதும்.. ரிக்கி பாண்டிங் முடிவு – ஏன் தெரியுமா?

மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளதால் ராஜஸ்தான் அணி கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் டிராவிடும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் வாய்ப்பை தட்டி கழிக்க மாட்டார் என்றே தெரிகிறது.

- Advertisement -