இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இவரே இந்திய அணியின் பயிற்சியாளர் – விவரம் இதோ

Sl

இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் பங்கேற்க இருப்பதால் 24 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல தற்போது தயாராகி வருகிறார்கள். இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது மும்பையில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் இடையில் அடுத்த ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த் காலகட்டத்தில் முதன்மை இந்திய அணி இங்கிலாந்து செல்ல இருப்பதால் இந்த தொடருக்கான அணியில் இளம் வீரர்கள் பங்கேற்ற விளையாடுவார்கள் என ஏற்கனவே பிசிசிஐ சார்பில் தகவல் வெளியானது.

- Advertisement -

அதன்படி இந்தியாவில் இருக்கும் ஷாட்டர் பார்மட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்களை வைத்து இந்த தொடரில் இந்திய அணி களமிறங்கியுள்ளனர். இந்த தொடர் முழுவதிலும் இளம் வீரர்கள் அதிகம் காணப்படுவார்கள் என்பதனால் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Dravid

இந்நிலையில் இந்த புதிய இந்திய அணியை வழிநடத்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளதால் இந்த இளம் அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி அளிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

rahul-dravid

ஏற்கனவே இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராககவும், தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராகவும் இருக்கும் டிராவிட் நிச்சயம் இலங்கை தொடரில் இந்திய அணியை சிறப்பாக பயிற்சியளித்து வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement