முதல் டெஸ்ட்க்கு முன்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிரத்யேக பயிற்சி அளித்த டிராவிட் – எதற்கு தெரியுமா?

Shreyas
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அதன்பின்னர் வெற்றிகரமாக நாடு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதோடு இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியதில்லை என்கிற மோசமான சாதனையை முறியடித்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்றும் ரசிகர்கள் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பினை வைத்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த புஜாரா, ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் நீக்கப்பட்டு தற்போது இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருவதால் மிடில் ஆர்டரில் உள்ள குறையை போக்கும் வகையில் இந்திய அணியின் வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில பிரத்யேக பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரரான ஷ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது கூடுதலாக நேரத்தை ஒதுக்கி பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ரஹானேவின் இடத்தை நிரப்பும் வீரராக பார்க்கப்படும் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய மண்ணில் நடைபெற்ற 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 ரன்களை குவித்திருந்தாலும் அவரது சராசரி 39-ஆக மட்டுமே உள்ளது.

- Advertisement -

மேலும் வெளிநாட்டு ஆடுகளங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக சற்று அவர் தடுமாற்றத்தை சந்திப்பதால் எதிரணிகள் அனைத்துமே அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை ஆட்டமிழக்க வைக்கும் புக்தியை கையில் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த யுக்தியை முறியடிக்கும் வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவீங்களா? முக்கிய கேள்விக்கு கேப்டன் ரோஹித் நேரடி பதில்

மேலும் பொதுவாக 22 யார்டு இருக்கும் கிரீஸிலிருந்து தான் பந்துவீச்சாளர்கள் பவுலிங் செய்வார்கள் ஆனால் தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பயிற்சியின் போது 18 யார்டிலிருந்தே ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி பயிற்சி அளித்து வருகின்றனர். ஏனெனில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் அனைவரும் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதனால் பந்து விரைவாக அதிக உயரத்திற்கு வரும் என்பதனாலே அவருக்கு இந்த பிரத்யேக பயிற்சி வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement