அண்டர் 19 பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் அதிரடி நீக்கம் – காரணம் இதுதான்

Dravid
Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக பதவி வகித்து வந்தார்.

rahul-dravid

- Advertisement -

இந்நிலையில் அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும் இரட்டை பதவி வகிப்பதால் அவருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் இந்திய ஏ அணிக்கும், அண்டர் 19 அணிக்கும் பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஐசிசி தகவலின்படி சிதான்ஷூ கோடக் மற்றும் பாரஸ் மாம்பரே ஆகியோர் முறையே இந்திய ஏ அணிக்கும், அண்டர் 19 அணிக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளனர். அடுத்த சில மாதங்களில் இவர்கள் பொறுப்பு ஏற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

dravid

இந்நிலையில் இந்த விடயம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் இந்திய ஏ அணிக்கு சிறப்பான வீரர்களை தேர்வு செய்து அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்கி இந்திய தேசிய அணிக்கு அனுப்பும் அற்புதமான வேலையை செய்த டிராவிட்டை அந்த பதவியில் இருந்து நீக்குவது தவறான விடயம் என்று தங்களது ஆதங்கத்தை இணையத்தில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement