கோலியை கடந்த ராகுல். வெளியான புதிய டி20 தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

rahul 3

- Advertisement -

இந்நிலையில் டி20 வீரர்களுக்கான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் கே.எல். ராகுல் (823) இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் விராட் கோலி (673) தனது 9ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (662) மூணு இடம் முன்னேறி 10ஆவது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானின் பாபர் அசாம் (879) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை. ஷிகர் தவான் (553) 24ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சிறந்த பவுலர்களுக்கான ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் (749) தனது நம்பர்-1 இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (742), நியூசிலாந்தின் மிட்சல் சாண்ட்னர் (677) ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். இந்திய பவுலர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை. பும்ரா (630) 11ஆவது இடம் பிடித்தார்.

இந்நிலையில் இந்த டி20 தரவரிசை பட்டியலில் ராகுல் கோலியை முந்தினார். மேலும் டி20 தரவரிசை ட்டியலில் ராகுல் மிகவிரைவாக அனைவரையும் கடந்து முன்னேறி வருகிறார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ராகுல் தற்போது தனது தடத்தை நிரூபித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement