ஒரே டி20 போட்டியில் விளையாடியுள்ள 20 வயது இந்திய வீரருக்கு கல்யாணமாம் – யாருனு பாருங்க

Rahul-Chahar

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்திய அணியில் இளம் வயதில் இடம் பிடித்த வீரர் தான் ராகுல் சாகர். தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகரின் சகோதரரான இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சினால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார்.

deepak

அதன்படி இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் கயானாவில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்காக ராகுல் சாகர் விளையாடியுள்ளார். அதற்கடுத்து அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் தனது இடத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் தீபக் சஹர் ஒருநாள் தொடருக்கு முன்பாக தற்போது தனது தம்பியின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள் என்றும் நீண்டநாட்கள் காதலித்த அவர்களை வாழ்த்துவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் நான்காவது சகோதர கிரிக்கெட்டர்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு முன் அமர்நாத் சகோதரர்கள், பதான் சகோதரர்கள், பாண்டியா சகோதரர்கள் இந்திய அணிக்காக சேர்ந்து விளையாடி உள்ளனர். அவர்களுக்கு அடுத்து தற்போது சாகர் சகோதரர்கள் சேர்ந்து விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -