2 நாட்களில் ரெய்னாவின் சாதனையை காலி செய்த ராகுல் சாகர் – விவரம் இதோ

Rahul-Chahar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத ராகுல் சாகர் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

deepak

இதன் மூலம் ராகுல் சாகர் டி20 அரங்கில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக இளம் வயதில் டி20 போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை அவர் சுரேஷ் ரெய்னாவை கடந்து அவர் பெற்றுள்ளார்.

சுரேஷ் ரெய்னா டி20 போட்டிகளில் 20 வயது 4 நாட்கள் ஆன போது அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு நாள் வித்தியாசத்தில் 20 வயது 2 நாட்கள் என்ற கணக்கில் ராகுல் சாகர் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

sundar

இந்தப் பட்டியலில் இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை வாஷிங்டன் சுந்தர் (18 வயது 80 நாட்கள்) வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement