IND vs RSA : சொல்லி வைத்து அரைசதம் அடித்த ராகுல் மற்றும் சூர்யா – போட்டியில் நடந்த அசத்தல் சம்பவம்

KL-RAHUL
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

- Advertisement -

பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணியின் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்திய அணி எளிதான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் குறைவான ரன்களை சேசிங் செய்ய ஆரம்பித்த இந்திய அணியானது எளிதாக போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரோஹித் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் விராட் கோலியும் மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இந்திய அணி பொறுமையாக ரன் குவித்து வந்தது.

Suryakumar Yadav

ஆனாலும் சூர்யா குமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இருவருக்கும் அரை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்த வேளையில் 45 ரன்கள் எடுத்திருந்த கே.எல் ராகுல் ஒரு ரன் எடுத்து 49 ரன்கள் உடன் களத்தில் இருந்த சூரியகுமார் யாதவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். பின்னர் சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்த பின்னர் மீண்டும் கே.எல். ராகுலுக்கு சிங்கிள் அடித்து அவருக்கும் அரை சதம் அடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs RSA : முதல் 3 ஓவர்களிலேயே வெற்றிக்கான அஸ்திவாரம் போட்ட இந்திய அணி – பாத்திருக்க வாய்ப்பேயில்ல

வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 6 அடித்த ராகுலும் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இறுதியில் ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் என சொல்லி வைத்தார் போல் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement