நியூசிலாந்து சென்றும் பழக்கத்தை மாற்றாத ராகுல், மனிஷ் பாண்டே ஜோடி – வைரலாகும் வீடியோ

Pandey

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Pandey-1

அதிலும் குறிப்பாக கர்நாடக வீரர்களான மணிஷ் பாண்டே மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று கூறலாம். ராகுல் இரண்டு தொடர்களிலும் கலக்க மனிஷ் பாண்டே டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இவர்கள் இருவர் செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அதன்படி அவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் அதாவது கர்நாடக அணிக்காக விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் கோப்பை போட்டியில் விளையாடும் போது தங்களுக்குள் கனடாவில் பேசிக் கொண்டு விளையாடுவது பழக்கம்.

அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியிலும் அவர்களுக்குள் கன்னட வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் இந்த போட்டியில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -