என்னதான் ஐயர் ஜெயிச்சி குடுத்தாலும், இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind vs nz 1

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும் குவித்தனர். அதன்பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ரோஹித் 7 ரன்கள், ராகுல் 56 ரன்கள் மற்றும் கோலி 45 ரன்கள் குவித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 29 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் என 58 ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் குவிக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Iyer

இந்த போட்டியில் இந்திய அணி 204 ரன்களை 19 ஓவர்களில் எளிதாக சேசிங் செய்ய ஸ்ரேயாஸ் அய்யர் கொடுத்த பினிஷிங் காரணமாக இருந்தாலும், அதற்கு முன்னர் ராகுல் அடித்த அந்த அரை சதம் இந்திய அணி வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியது என்றும் கோலி மற்றும் ராகுல் அடித்த 99 ரன்கள் வெற்றிக்கு முக்கியம் என்று கூறலாம். ஏனெனில் துவக்கத்திலேயே ரோகித் விக்கெட்டை இழந்த இந்திய அணி பிறகு அணியை நிலைப்படுத்தி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த போது இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி 99 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

Rahul

மிடில் ஓவர்களில் கோலி மற்றும் ராகுல் அமைத்த இந்த சிறப்பான அடித்தளம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது என்றும் கூறலாம். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்ததும் அவருடைய பாசிட்டிவான பேட்டிங் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது என்று கூறலாம். நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார் இருப்பினும் இந்த மைதானம் சிறியது என்பதால் அவர்களை குறைகூறுவது அர்த்தமற்றது. இந்த போட்டியில் ஐயர் மற்றும் ராகுல் விளையாடிய விதம் இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement