நேற்றைய போட்டியில் ராகுலுக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதலை கவனித்தீர்களா ? – வைரலாகும் வீடியோ

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த தொடரில் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக நியூசிலாந்து அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 297 என்ற இலக்கினை 48வது ஓவரிலேயே நியூசிலாந்து அணி அடித்து அசத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்காக ராகுல் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறும் பொழுது 13 ஆவது ஓவரிலேயே களத்திற்குள் வந்தார்.

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்து 112 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 20 ஆவது ஓவரை வீசிய ஜிம்மி நீஷம் அவர் ரன் ஓடும் போது அவரை தடுக்கும் வகையில் நகர்ந்தார். அது ராகுலின் ஓட்டத்தை தடுக்கும் செயலாக இருந்ததால் ராகுல் சற்று சமாளித்து ஓரமாக ஓடிய பின்னர் அவரிடம் சென்று பேசினார்.

தனால் அவர்களுக்கு இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் இது சீரியஸான வாக்குவாதம் ஆக அமையவில்லை சற்று ஜாலியாகவே அவர்கள் மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement