- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி ரோஹித் மோதலில் கோலிக்கு ஆதரவாக விசுவாசத்தை காட்டிய – 2 வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி குறித்து இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ரோகித் கோலி இடையேயான மோதல் தான். இந்த மோதலை தீர்த்து வைக்க பி.சி.சி.ஐ அதிகாரி அமெரிக்கா சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோகித் கோலி மோதலில் கோலிக்கு ஆதரவாக 2 இந்திய வீரர்கள் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. அதுயாதெனில் ஏற்கனவே ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரை பின்தொடர்வதை (unfollow) நிறுத்தினார். இதன்மூலம் தன் எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டினார் ரோஹித்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி வீரர்களான ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் இதுநாள்வரை அனுஷ்கா சர்மாவை பின்தொடராமல் இருந்தனர். ஆனால் ரோஹித் அன்பாலோ செய்த பின் தற்போது அவர்கள் இருவரும் அனுஷ்காவை பாலோ (follow) செய்துள்ளார்கள்.

இதன் மூலம் கோலிக்கு அவர்கள் தங்கள் ஆதரவினை வெளிக்காட்டியுள்ளனர். ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் நன்றாக விளையாடாமல் இருந்தபோதும் கோலியால் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இவர்கள் இருவரும் தங்களது விசுவாசத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

- Advertisement -
Published by