மீண்டும் துவக்க இடத்திலிருந்து மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்ட ராகுல் – காரணம் இதுதான்

- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன் பின்னர் ஜனவரி மாதம் துவக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Rahul

இந்நிலையில் சமீபத்தில் காயமடைந்து அணியில் இருந்து விலகி இருந்த தவானுக்கு பதில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களம் இறங்கி வந்தார். துவக்க வீரராக தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக ராகுல் வெளிப்படுத்தி வந்ததால் இனி ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரராக தொடர்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காயத்தில் இருந்து மீண்ட தவான் ரஞ்சிப் போட்டியில் டெல்லி அணி கேப்டனாக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார். எனவே மீண்டும் தான் துவக்க வீரராக இந்திய அணிக்கு தயார் என்பதை அந்த ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார். மேலும் இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களான இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள தவான் நிச்சயம் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhawan 1

அதனால் ராகுலின் நிலை தற்போது மீண்டும் மிடில் ஆடருக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்காவது இடத்தில் ஐயர் சிறப்பாக ஆடி வருவதால் ராகுல் எந்த இடத்தில் ஆடுவார் என்று தெரியவில்லை. மேலும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படுமா ? என்பதும் தெரியவில்லை இருப்பினும் மிடில் ஆர்டரில் ஆடுவதை விட துவக்க ஆட்டக்காரர் ஆகவே ராகுல் சிறப்பாக விளையாடி வருவதால் ராகுலின் இடம் தற்போது சிக்கலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement