- Advertisement -
ஐ.பி.எல்

ஹாஸ்பிடலில் இருக்கும் என்னோட அம்மா சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டேன்.. 2 டைம் சாதிச்சுட்டேன்.. குர்பாஸ் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை 8 வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மே 26ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் சுமாராக விளையாட விளையாடி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் ஐபிஎல் ஃபைனலில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக ஹைதராபாத் மோசமான சாதனை படைத்தது.

முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ரசல் 3, ஹர்ஷித் ராணா 2, மிட்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்தனர் அதைத்தொடர்ந்து 114 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51*, ரஹமனுல்லா குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து 10.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அம்மாவுக்கு பரிசு:
அதனால் கொல்கத்தா அணி 2012, 2014க்குப்பின் 3வது முறையாக கோப்பையை வென்றது. அதன் காரணமாக சென்னை மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக கொல்கத்தா சாதனை படைத்தது. மறுபுறம் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் லீக் சுற்றில் அதிரடியாக விளையாடியும் முக்கியமான ஃபைனலில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவிடம் ஐபிஎல் ஃபைனல் முடித்து விட்டு ஏதாவது இந்தியாவிலிருந்து வாங்கி வரட்டுமா என்று கேட்டதாக ரஹமனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். அதற்கு கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்றால் அதுவே தமக்கு மிகப்பெரிய பரிசு என்று அம்மா சொன்னதாக குர்பாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதை தற்போது நிறைவேற்றியதற்காக பெருமைப்படுவதாக தெரிவிக்கும் குர்பாஸ் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அம்மா போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் தற்போது நன்றாக இருக்கிறார். இப்போட்டிக்கு முன்பாக என்னுடைய அம்மாவிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டேன்”

“அதற்கு அவர் எதுவும் வேண்டாம். நீ ஃபைனலில் வெற்றி பெற்றால் அதுவே எனக்கு மிகப்பெரிய பரிசு. உன்னுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்று அம்மா சொன்னார். பில் சால்ட் இந்த வருடம் ஓப்பனிங் இடத்தில் சிறப்பாக விளையாடினார். நான் அடுத்ததாக நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராக விரும்பினேன். அதே சமயம் சால்ட் காயத்தை சந்தித்தால் நான் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு தயாராக இருந்தேன்”

இதையும் படிங்க: வெற்றிக்கான பாராட்டு அவரை சேரும்.. 24.75 கோடிக்கு வாங்குனப்போ எல்லாரும் கிண்டல் பண்ணாங்க ஆனா.. ஸ்டார்க் பேட்டி

“ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அதற்காக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 2 மாதங்கள் கடினமாக உழைக்கும் உங்களுக்கு இது போன்ற முடிவு கிடைப்பது மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கொல்கத்தா ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -