ராகீம் கார்ன்வெல் 140 கிலோ எடையைப்பற்றி பேசும் உங்களுக்கு. அவருடைய திறமையை பற்றி தெரியுமா ? – சுவாரஸ்ய தகவல் இதோ

Cornwall-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட 2வது மற்றும் 3வது டி0 போட்டிகளை வெற்றிகரமாக கைப்பற்றி இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.

Rahkeem-Cornwall-1

- Advertisement -

அதனை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் அறிமுகமானார். இவரது உயரம் 6.6 அடி இவரது எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான வெயிட் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு அவர் தேர்வானது அனைவரும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் உலகில் மிக அதிக எடை கொண்ட வீரர் என்று இவர் கருதப்படும் இவர் உடல் எடை மற்றும் பிரமாண்ட உடலைமைப்பு குறித்து அனைவரும் பேசிக் வருகின்றனர். ஆனால் அவருடைய திறமை வேறு அவர் இதுவரை 55 முதல் தர போட்டியில் ஆடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 17 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடும் தன்மை கொண்டவர் அவருடைய திறமையை பற்றி யாரும் பேசாமல் அவருடைய அடையாளமாக அவரது உருவத்தை கணக்கில் கொள்வது தவறான விடயம் ஆகும். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆடும் போது அவருடைய திறமை வெளிவரும் மேலும் தற்போது அவருடைய எடையை குறைப்பதற்கான பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருவதாக அணி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cornwall

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டரான இவர் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அவர் பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement