இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் என் திறமை வெளிப்படும் – மலை மனிதன் கார்ன்வெல் பேட்டி

Rahkeem-Cornwall-1

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் நாளை 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Rahkeem-Cornwall

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்கு ராகீம் கார்ன்வெல் தேர்வானது அனைவரும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் உலகில் மிக அதிக எடை கொண்ட வீரர் என்று இவர் கருதப்படும் இவர் உடல் எடை மற்றும் பிரமாண்ட உடலைமைப்பு குறித்து அனைவரும் பேசிக் வருகின்றனர். ஆனால் அவருடைய திறமை வேறு அவர் இதுவரை 55 முதல் தர போட்டியில் ஆடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 17 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாட இருக்கும் ராகீம் கார்ன்வெல் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு ஏற்ற கிரிக்கெட் வடிவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம் ஆகும். எனவே இந்த டெஸ்ட் தொடரில் எனது திறமையை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் நிரூபிப்பேன்.

சிறப்பான ஆட்டத்தின் மூலம் நீண்ட நாட்கள் தேசிய அணிக்காக விளையாட இருக்கிறேன். முதல் தரப் போட்டிகளில் கூட டெஸ்ட் போட்டிகளில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்ததால் தான் என்னை தேசிய அணியில் தேர்வு செய்தார்கள். எனவே என்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன். மேலும் என்னுடைய உடல் எடை குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். அதனை குறைக்க தற்போது தனி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று ராகீம் கார்ன்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.