2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதித்த ரஹானே – விவரம் இதோ

Rahane-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

bumrah

அதன்பிறகு இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வீரர்களான ரஹானேவின் சதம்(102), விஹாரியின் சிறப்பான ஆட்டம் என இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சால் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

rahane

இந்த போட்டியில் ரகானே சதம் அடித்ததன் மூலம் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். அதாவது கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் சதம் அடித்து இருந்தாலும் இந்த சதம் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக இந்திய அணிக்கு இதுவே முதல் போட்டி. எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணிக்காக முதல் சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரஹானே நேற்று படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement