இந்திய அணிக்காக நான் இதை கூட செய்யத் தயார் – ரஹானே பேட்டி

Rahane
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான அஜின்க்யா ரஹானே இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு உள்ளூர் அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த இவரை டெஸ்ட் அணியிலிருந்து இந்திய நிர்வாகம் நீக்கியது. அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் டி20 என எதிலும் ரஹானே இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ரகானே செயல்பட உள்ளார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ரஹானே அளித்த பேட்டியில் : இந்திய அணிக்காக நான் பல்வேறு ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். இந்த ஐபிஎல் தொடர் எனக்கு கை கொடுத்தது நான் சிறப்பாக ஆடினால் ஒருவேளை உலகக்கோப்பை அணியில் நான் இடம்பெற வாய்ப்பு இருக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்காக எந்த இடத்திலும் இறங்கி என்னால் விளையாட முடியும் என்று ரகானே பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

rahane2

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு இருக்காது என்று உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement