ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்கள் இருவரே காரணம் – ரஹானே புகழாரம்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

Gill

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்று போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே கூறுகையில் : உண்மையிலேயே எங்களது வீரர்களை நினைக்கும்போது பெருமை அடைகிறேன். நாங்கள் இப்போட்டியில் விளையாடிய விதம் மிக சிறப்பாக இருந்தது. நான் இந்த வெற்றிக்கான கிரெடிட்டை அறிமுக வீரர்களான சிராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு கொடுக்க விரும்புகிறேன்.

siraj 2

ஏனெனில் தங்களது முதல் போட்டியிலேயே அவர்கள் தங்களது கேரக்டரை நிரூபித்துள்ளனர். மேலும் உமேஷ் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது காயமடைந்து வெளியேறியதால் நாங்கள் மீதமிருந்த பந்துவீச்சாளர்களை வைத்து பந்து வீசினோம். ஜடேஜா ஆல்-ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்ததை அப்படியே இந்த சர்வதேச போட்டிகளிலும் தொடர்ந்துள்ளார். அவரிடம் சிறப்பான ஆட்டத்திறன் உள்ளது.

Gill 2

சிராஜும் அதேபோன்று கட்டுக்கோப்பாக பந்து வீசுகிறார். ஒரு அறிமுக வீரர்களாக இருந்து இதுபோன்று சிறப்பாக செயல்படுவது நிச்சயம் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒன்று. அவர்கள் இருவரது முதல்தர கிரிக்கெட் அனுபவமே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் இவ்வளவு சிறப்பாக விளையாட உதவுகிறது என்று அவர்கள் இருவரையும் ரஹானே பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement