இவ்வளவு திறமை மற்றும் டேலன்ட் இருந்தும் இவர் இவர் டெஸ்ட் போட்டியில் வெளியில் உட்காருவது வருத்தமளிக்கிறது – ரஹானே உருக்கம்

Rahane
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

rahane

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டனாக ரஹானே இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு டெஸ்ட் தொடர் ஆகும். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது தற்போது இந்த தொடரை நாங்கள் சிறப்பாக கையாள எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.

இந்த தொடரில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவதை நான் எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் இவ்வளவு திறமையான ஒரு வீரர் அணிக்கு துவக்கத்தை சிறப்பாக அளிக்கும் அத்தனை திறமை இருந்தும் அவர் அணியில் சேர்க்கப்படாமல் வெளியில் உட்காருவதை பார்த்து நான் வருத்தம் அடைந்துள்ளேன்.

Rohith

மேலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்து இருக்கும்போது எனக்கு அது கஷ்டமாகவே இருக்கும். இந்நிலையில் இந்த தொடரில் அவர் துவக்க வீரராக களமிறங்க போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது அவரிடம் உள்ள திறமை நிச்சயம் அவர் இந்த தொடரில் காண்பிப்பார் அவர் ஒரு அற்புதமான வீரர் என்று ரோஹித்தை புகழ்ந்து பேட்டியளித்தார் ரஹானே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement