நாளைய போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக அணியில் இதற்காக சேர்க்கப்படுவார் – ரஹானே உறுதி

Rahane
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்க உள்ள போட்டி குறித்து இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் 17 டெஸ்டுகள் ஒரு சதம் அடிக்க காத்திருந்தேன் அதுவும் எனக்கு ஒரு அனுபவம் தான்.

மேலும் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட இருக்கிறோம். மேலும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் அதனை நாங்கள் எங்களுக்கு சாதகமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினாலே போதும். இந்திய மைதானங்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பது அரிதானது. எனவே நாளைய போட்டியில் ஒரு புதிய பிளானை இந்திய அணியில் செயல்படுத்த உள்ளோம்.

ashwin 2

அதன்படி சுழற்பந்துவீச்சு ஜோடிகளான அஷ்வின் மற்றும் ஜடேஜாவை இந்த போட்டியில் நாங்கள் களமிறக்க திட்டமிட்டு உள்ளோம். ஏனெனில் இந்திய மைதானங்களில் அஸ்வின் மிக சிறப்பாக செயல்படும் திறமை உள்ளவர். எதிரணியின் விக்கெட்டுகளை தேவைக்கு ஏற்ப வீழ்த்தும் திறன் அவரிடம் உள்ளது. எனவே நாளைய போட்டியில் நிச்சயம் அஸ்வின் இடம் பெறுவார்.

Ashwin

மேலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே எங்களுடைய புதிய பிளான். இந்த பிளானை நாங்கள் நாளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் இருப்பினும் இதன் முடிவு குறித்து நாளை காலையே தெரியவரும் என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement