ஜடேஜாவும் கோலியும் இப்படி பண்ணுவாங்கனு நான் நெனச்சிகூட பாக்கல – ரஹானே ஆச்சரியம்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Umesh

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 254 குவித்தார். ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும் இன்று காலை போட்டி தொடங்கியதும் 500 ரன்களுக்கு மேல் அடிப்போம் என்று நினைத்தேன். ஆனால் ஒருபோதும் 600 ரன்களுக்கு மேல் அடிப்போம் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஜடேஜா மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடிய விதமே அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றது.

Jadeja

இந்த மைதானத்தில் 450 முதல் 500 ரன்களே வரும் என்று நினைத்தேன். ஆனால் 600 ரன்களை எளிதாக நாங்கள் கடந்து உள்ளோம். இதற்கு அவர்கள் இருவர் அமைத்த பாட்னர்ஷிப் தான் காரணம் விசாகப்பட்டினம் போட்டியை போல இந்தப் போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடித் தருவார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று 3 விக்கெட்டுகளை தால் நாளை காலை விரைவாகவிக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம் என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement