எனக்கு பிடித்த இடம் நம்பர் 4. அதில் இவரே எனது ரோல்மாடல் – ரஹானே பேட்டி

Rahane
- Advertisement -

இந்திய ஒருநாள் அணியில் நான்காவது வீரர் பற்றி கடுமையாக விமர்சனம் நடந்துவரும் இந்த வேளையில் உலக கோப்பையில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ரகானே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

rahane 1

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தாவில் பெங்கால் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சி ஒன்றில் அழைப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரகானே இந்திய அணி நான்காவது இது குறித்து மேடையில் பேசும்போது : இந்த விழாவில் என்னை நான்காவதாக மேடைக்கு அழைத்து இருக்கிறீர்கள். எனக்கு பிடித்த இடம் 4 என்று கிண்டலாக பேசத் தொடங்கினார்.

மறைமுகமாக அவர் கூறுவது யாதெனில் இந்திய அணி 4-வது வீரராக அவர் விளையாட விருப்பப்படுகிறார். மேலும் அவர் கூறும் போது மும்பையில் கடும் மழை பெய்து வருவதால் பெங்களூரில் உள்ள பயிற்சி அகாடமியில் தினமும் பயிற்சி செய்து வருகிறேன் அங்கு டிராவிட் இருக்கிறார். டிராவிட் தான் என்னுடைய ரோல் மாடல் அவருடன் அங்கு பயிற்சி பெறுவது மகிழ்ச்சியான ஒன்று.

rahul-dravid

மேலும் அடுத்து வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான் என்னுடைய திறமையை வெளிக்காட்ட ஆர்வமாகக் காத்திருக்கிறேன். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பலமான அணியாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பின்பற்ற வேண்டும் அதனால் இந்த தொடரில் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement