சாதனைகளை நினைத்து விளையாட நான் ஒன்றும் சுயநலவாதி கிடையாது – வெளியப்படையாக பேசிய ரஹானே

Rahane
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.

rahul

- Advertisement -

நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 44 ரன்களும், விஹாரி 32 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதம் அடிக்கும் அருமையான வாய்ப்பை இழந்த ரஹானே பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தேன் அதன்படி ராகுல் என்னுடன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அதன்பிறகு விகாரியம் சிறப்பாக ஆடினார். அவர் இங்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணி தொடரிலும் சிறப்பாக ஆடினார். அதனால் எங்களால் ஓரளவுக்கு நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.

Rahane

சதம் அடிக்க முடியாமல் போனது பற்றி கேட்கிறீர்கள் நான் அடிக்காமல் போனது எனக்கு வருத்தம் கிடையாது. ஏனெனில் நான் சுயநலவாதி கிடையாது தனிப்பட்ட சாதனைகளுக்காக நான் என்றுமே யோசிப்பது கிடையாது. இந்திய அணி நலனுக்கு எது நல்லதோ அதனை செய்யவே நான் விரும்புகிறேன். அதனால் நான் சதத்தை தவறவிட்டதைப்பற்றி வருந்தவில்லை. அணிக்கு தேவையான பங்களிப்பை என்னால் முடிந்த வரை கொடுத்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று சதம் தவறவிட்டது பற்றி ரஹானே கூறினார்.

Advertisement