முதல் போட்டிக்கு பின்னர் நாங்க அதை பத்தி நெனைக்கல. கரெக்ட்டா வேலை செஞ்சோம் – ரஹானே ஓபன்டாக்

Rahane-4
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-1 என்ற நிலையில் சமநிலையை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே குவிக்க அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி ரஹானேவின் சதத்தினாலும், ஜடேஜாவின் அரை சதத்தினாலும் 326 ரன்கள் குவித்தது.

Gill

- Advertisement -

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் கில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ரஹானே 27 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று போட்டி முடிந்து வெற்றி குறித்து சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேசிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே கூறுகையில் : சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகவும் வருத்தமாக இருந்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் போது சில மணி நேரங்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்ததால் எங்களது வருத்தம் அதிகரித்தது.

ashwin 1

ஆனாலும் நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டிக்காக பயிற்சி ஏதும் சிறப்பாக எடுக்கவில்லை. இருந்த போதும் அதையெல்லாம் மறந்து விட்டு நாங்கள் இந்த ஆட்டத்தில் முழுமையான கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டோம். இந்த அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

bumrah

இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஏதும் மேற்கொள்ளாத நிலையில் தங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். தங்களது கடமையை சரியாக செய்து அணி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என இந்திய வீரர்களை பாராட்டி ரஹானே பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement