நாங்க 2 பேருமே ரொம்ப வருஷமா விளையாடுறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும் – சக வீரருக்கு சப்போர்ட் செய்த ரஹானே

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை லீட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகவே சமீப காலத்தில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Pujara

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பல விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் எழுந்து வருகின்றன. ஆனால் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். லண்டன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ரஹானே 146 பந்துகளை சந்தித்து 61 ரன்களும், புஜாரா 206 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் குவித்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்நிலையில் தங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரஹானே கூறுகையில் : என்னைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தான். முக்கியமான நபர்களை பற்றி தான் மக்கள் பேசுவார்கள் அதனால் தற்போது என்னைப் பற்றியும் பேசுவது மிகவும் மகிழ்ச்சி. அது குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. என்னை பொருத்தமட்டில் அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பதே எனக்கு முக்கியம்.

rahane

அந்த வகையில் நான் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு எனது பங்களிப்பை வழங்கி வருகிறேன் என்று ரகானே கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : சொந்த ஆட்டத்தை விட அணியின் நலம் தான் முக்கியம். அணிக்கு என்ன தேவையோ அதை நோக்கியே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். புஜாரா மிகவும் மெதுவாக ஆடுகிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால் அவரது அந்த இன்னிங்ஸ் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது முக்கிய மாற்றமாக இருந்தது.

pujara 1

நானும் புஜாராவும் நீண்ட நாட்களாக இணைந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்க எங்களுக்கு தெரியும். குறிப்பிட்ட சூழ்நிலையை எந்த மாதிரி எதிர்கொள்வது என்பதும் எங்களுக்கு தெரியும் என்று புஜாராவையும் சப்போர்ட் செய்து ரஹானே பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement