இந்திய அணியின் முன்னணி வீரரான ரஹானே இந்திய அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் ஆவார். ஆனால் அவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Hello ❤️ pic.twitter.com/25oQyXOQeV
— Ajinkya Rahane (@ajinkyarahane88) October 7, 2019
தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவி ராதிகாவுக்கும் அழகிய பெண் குழந்தை ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்பு பிறந்தது. அந்த இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் புகைப்படத்தை தனது உள்ளங்கையில் குழந்தையை வைத்து புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரஹானே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஹானேவின் இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை கமெண்ட் இன் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருவதோடு அவரின் அந்த புகைப்படத்தை அதிக அளவு இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.