அவரது கஷ்டம் எனக்கு தெரியும். வெளியே அமர்ந்து போட்டியை பார்ப்பது கொடுமை – இளம்வீரருக்கு ஆதரவாக பேசிய ரஹானே

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் காலை 4 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தயாராக உள்ளனர். இந்திய அணியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

Ind-1

- Advertisement -

மேலும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் உடல்நிலை தேறியதால் அவர் நிச்சயம் இந்த போட்டியில் பங்கேற்பார். அதோடு விக்கெட் கீப்பராக சஹா இந்த போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டியிலும் இளம் வீரரான பண்டிற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அவர் வெளியிலேயே அமர வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறும்போது : எவரொருவரும் வெளியில் அமர்ந்து போட்டியை ரசிப்பது என்பது கஷ்டம் தான். அவர்களின் வேதனை எனக்கு புரிகிறது இருப்பினும் பண்ட் ஒரு இளம் வீரர்.

Pant

அவர் இதிலிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஜூனியர் வீரராக இருந்தாலும் சீனியர் வீரராக இருந்தாலும் சரி கிடைக்கும் வாய்ப்பிற்காக கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறையும் உணர்ந்து அதை திருத்திக் கொண்டால் மீண்டும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பண்டிற்கு ஆதரவாக ரஹானே பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement