வாய்ப்புன்னு ஒன்னு குடுங்க அது போதும். எந்த இடத்தில வேணுனாலும் விளையாடுறேன் – 33 வயது வீரர் புலம்பல்

IND-2
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 9 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருபவர் அஜின்கியா ரஹானே. இவருக்கு தற்போது 32 வயதாகிறது. தோனியின் தலைமையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர். 65 டெஸ்ட் போட்டிகளிலும், 90 ஒருநாள் போட்டிகளிலு,ம் 20 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி வந்த பிறகு இவர் கொஞ்சம் கொஞ்சமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அவரது புள்ளி விவரமும் அதைத்தான் சொல்கிறது. பெரிதாக எதுவும் ரன் சேர்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குள் வருவதாக பேசியுள்ளார் ரஹானே.

மேலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

Rahane
.
நான் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க காத்து இருக்கிறேன். என்னை முழுமையாக தயார் படுத்திக் கொண்டு வருகிறேன். அணியில் எந்த இடத்திலும் இறங்கவும் தயாராக உள்ளேன். துவக்க வீரராக இருந்தாலும் சரி, ஐந்தாவது இடத்தில் இறங்கினாலும் சரி, எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போதும். அது வரை காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

rahane

இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அஜின்கியா ரகானே 2962 ரன்கள் அடித்துள்ளார். 3 சதமும் 24 அரை சதமும் இதில் அடங்கும். இவரது சராசரி 35.3 மட்டுமே. ஆகும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் வந்துவிட்ட வேளையில் 33 வயதான இவருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைப்பது மிக பெரிய விஷயமாகும்.

Advertisement