மெல்போர்ன் மைதானத்தின் கவுரவ போர்டில் 2 ஆவது முறையாக இடம்பெற்ற இந்திய வீரர் – விவரம் இதோ

ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக எதிர்த்து விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை செய்தது. இதனை தொடர்ந்து அடுத்து வரும் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறுமோ அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அடுத்தடுத்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ashwin 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியின்போது சதமடித்த ராஹானேவிற்கு அந்த மைதானத்தின் கவுரவ ஸ்கோர் போர்ட்டில் மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கவுரவம் யாதெனில் இதுவரை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் சதமடிக்கும் வீரர்கள் மற்றும் பந்து வீசும்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வீரர்களின் பெயர் எழுதப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய வீரர்களான சச்சின், சேவாக், கோலி, புஜாரா என பலரது பெயர் இந்த போர்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மெல்போர்ன் மைதானத்தில் 2 செஞ்சுரி அடித்து இரண்டு முறை பெயர் இடம்பெற்ற வீரராக ரஹானே அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரரான குண்டப்பா இரண்டு சதங்களை அடித்து அந்த போர்டில் இடம் பெற்றிருந்தார்.

mcg

அதனை தொடர்ந்து தற்போது ரகானே 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின்போது 147 ரன்களும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 112 ரன்கள் அடித்து இரண்டு சதங்களை விளாசி உள்ளதால் அவரது பெயர் தற்போது இரண்டாவது முறையாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கௌரவ பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahane

உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் விளையாட விரும்பும் இந்த மெல்போர்ன் ஆடுகளத்தில் ரஹானே அடித்த இந்த இரண்டாவது சதத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது இந்த சதம் சிறப்பான சதங்களில் ஒன்று என்றும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement