சென்னை அணிக்கு தோனி இருக்காருன்னா டெல்லி அணிக்கு நான் இருக்கேன் – சவால் விட்ட இந்திய வீரர்

Iyer
- Advertisement -

டெல்லி கேப்பிடல் அணி ஐபிஎல் தொடரில் 12 வருடமாக விளையாடி வருகிறது. பெரிதாக எந்த ஒரு சாதனையும் அந்த அணி செய்ததில்லை. இரண்டு அல்லது மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்கிறது. அவ்வளவுதான் அந்த ஆரம்ப காலம் முதலே இப்படித்தான் ஆடி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை போல எப்போதும் நல்ல வீரர்களை வைத்து அணியை கட்டமைக்கும் இருந்தாலும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே தான் இருக்கும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் அந்த அணியில் பல இந்திய வீரர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். அஜின்கியா ரஹானே, ரிஷப் பண்ட் ,ரவிசந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, பிரித்வி ஷா, ஷிகர் தவான் மேலும் சில உள்ளூர் இந்திய வீரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக அதிக இந்திய நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் இருப்பதால் இந்த வருடம் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துவக்க வீரர்களுக்கான இடம் இந்த அணியில் பெரும் சண்டைக்குள்ளாகும் என்றே தெரிகிறது. பிரித்வி ஷா, தவான், ஐயர், ரிஷப் பண்ட் இன்னும் சில வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் இவர்களில் யார் துவக்க வீரர்களாக களமிறங்கிய போகிறார்கள் என்பது முதல் போட்டியில் தான் தெரியும். இதன் காரணமாக தற்போது இந்த இடத்தைத்தான் எடுத்துக் கொள்ளப் போவதாக அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்….

நான் தொடக்க வீரராக களமிறங்குகிறேனா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை . நான் விரைவில் பயிற்சியை தொடங்க இருக்கிறேன். அதன் பின்னர் இறுதி தான் இது குறித்து முடிவு எடுக்கப்படும் நான் கிரிக்கெட் விளையாடிய தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறேன்.

Rahane

இப்போதும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் டெல்லியில் நான் இங்குஎங்கு ஆடுவேன் என்பது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை ஒருவேளை ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் இறங்கினால் கூட தோனி போன்று என்னால் நல்ல ஒரு பினிஷராக விளையாட முடியும் டெல்லி அணி கேட்டுக்கொண்டால் நான் அந்த இடத்திலும் நன்றாக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அஜிங்கிய ரஹானே.

Advertisement