அவருக்கு சொல்ல வேண்டியதில்லை.. உள்ளீடுகள் முக்கியம்.. ரோஹித், ஜெய்ஸ்வால் பற்றி மும்பை கேப்டன் ரஹானே

Ajinkya Rahane
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 10 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது.

அத்துடன் ஒரு தொடரின் பாதியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற பரிதாபத்தையும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சந்தித்தார். அதன் காரணமாக ஃபார்மை மீட்டெடுத்து தனது டெஸ்ட் கேரியரை காப்பாற்றிக் கொள்வதற்காக ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை விளையாடும் அடுத்த ரஞ்சிப் போட்டியில் ரோகித் விளையாட உள்ளார்.

- Advertisement -

ரஞ்சிக் கோப்பையில் ரோஹித்:

அவருடன் மற்றொரு இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தம்முடைய தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மாவுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை என மும்பை கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் அனுபவமிக்க உள்ளீடுகள் இளம் மும்பை வீரர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் எப்போதுமே ரோகித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்குத் தெரியும். ஜெய்ஸ்வால், ரோஹித் ஆகிய இருவரும் மும்பை அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. மிகவும் ரிலாக்ஸாக இருக்கக்கூடிய ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போதும் அதே கேரக்டரை தான் கொண்டிருப்பார். தன்னுடைய ஆட்டத்தை பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ள அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை”

- Advertisement -

ரஹானே நம்பிக்கை:

“எனவே ஆட்டத்திற்குள் வந்ததும் அவர் நன்றாக விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் எப்போதும் மாறவில்லை என்பது நல்ல விஷயமாகும். நன்றாக விளையாடுவதற்கு ரோகித் சர்மா திடத்துடன் காத்திருக்கிறார் என்பது முக்கியமான விஷயம். போட்டிக்குள் வந்ததும் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். நேற்று வலைப்பயிற்சியில் நன்றாக விளையாடிய அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது”

இதையும் படிங்க: தம்பி அபிஷேக் இதான் முக்கிய சான்ஸ்.. உங்க மூச்சை ஜெய்ஸ்வால் வெச்சுருக்காரு.. ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

“அவர் இந்த போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று நினைக்கிறேன். அடுத்த போட்டியில் விளையாடுவது பற்றி எனக்கு தெரியாது. எனவே அடுத்த 4 நாட்களில் அவருடைய உள்ளீடுகள் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமாக இருக்கும்” என்று கூறினார். இதை அடுத்து 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து ரோஹித் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement