தோனியின் ரெக்கார்டை பிடிக்க அஜின்கியா ரஹானேவுக்கு வாய்ப்பு – அதனை செய்வாரா ?

Rahane
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியுடன் கோலி தனது குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பினார். அந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதனால் மீதமிருக்கும் போட்டிகளில் இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.

Gill

கோலி இல்லாத இடத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்றும் அனைவரும் பேசி வந்த வேளையில் ரஹானே இரண்டாவது போட்டியின்போது தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். இந்த வெற்றியின் காரணமாக அனைவரும் ரஹானேவின் கேப்டன்ஷிப்பையும் இந்திய அணி செயல்பட்ட விதத்தையும் குறித்து பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாளை துவங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக தோனியின் ரெக்கார்டு சமன் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி மகேந்திர சிங் தோனி கேப்டன் ஆகும்போது தொடர்ச்சியாக நான்கு முறை இந்திய அணிக்கு தலைமை தாங்கி வெற்றி பெற வைத்தார்.

Rahane-4

அதே போன்று தற்போது ரஹானே இதுவரை கேப்டன்சி செய்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சிட்னி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தோனியின் சாதனையை சமன் செய்வார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 797 தான் குவித்திருக்கும் அவர் இன்னும் 203 ரன்களை குவித்தால் ஆயிரம் ரன்கள் எடுத்த 5 வீரராக அவர் திகழ்வார்.

Jadeja

அதுமட்டுமின்றி வெளிநாட்டு மைதானங்களில் 3000 ரன்கள் அடிக்க 109 ரன்கள் மட்டுமே அவருக்கு தேவைப்படுகிறது. இதையும் அடித்துவிட்டால் வெளிநாட்டு மைதானங்களில் 3 ஆயிரம் ரன்கள் அடித்த ஒன்பதாவது இந்திய வீரராக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement