இவர் இருப்பது தான் இந்திய அணிக்கு பலம். கண்டிப்பா அவர் நல்லா விளையாடுவார் – ரஹானே நம்பிக்கை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் உலகத்தரம் வாய்ந்த அணிகள் என்ற காரணத்தின் காரணத்தினால் இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் துவங்கும் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகரித்துள்ளது.

INDvsENG

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் துவக்க வீரர்கள் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலையில் ரோகித்துடன் ராகுல் துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் எவ்வாறு பேட்டிங் செய்ய போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனெனில் சமீப காலமாக இந்திய அணியின் பவுலிங் யூனிட் அயல்நாடுகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பேட்டிங் தான் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. எனவே இந்த தொடரில் இந்திய வீரர்களின் பேட்டிங் எவ்வாறு அமையப் போகிறது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

pujara 2

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் 3வது வீரராக புஜாராவே விளையாடுவார், அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இங்கிலாந்து போன்ற மைதானங்களில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது.

Pujara 2

இது குறித்து நாங்கள் பல ஆலோசனைகளை நடத்தி தற்போது பல விதமான திட்டங்களையும் வைத்துள்ளோம். வீரர்களுக்கிடையே சரியான புரிதல் இருக்கும் பொழுது எந்த நேரத்திலும் போட்டியில் வெற்றி பெற முடியும். அதே போன்று இந்த மைதானத்தின் சூழ்நிலையை அறிந்து நாங்கள் எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என ரஹானே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement