மூன்றாண்டு சோகத்தை இன்று மகிழ்ச்சியாக மாற்றிய டேடி ரஹானே – விவரம் இதோ

Rahane-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane

- Advertisement -

இந்த போட்டியின் இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட ரோஹித் மற்றும் ரஹானே ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தனது சதத்தை பதிவு செய்தார் ரஹானே.

மேலும் தனது குழந்தை பிறந்த பிறகு அவர் நடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் – ரஹானே ஜோடி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.

Rahane 2

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் குவித்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளைய ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த உத்வேகம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement