அம்பயரிடம் சண்டைக்கு சென்ற கேப்டன் ரஹானே. கடுப்பான வீரர்கள் – அப்படி அம்பயர் செய்த தவறு என்ன தெரியுமா ?

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

siraj 2

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் செயல்பட்ட அம்பயர்கள் பல தவறான முடிவுகளை வழங்கி அதிர்ச்சி அளித்தனர். சிராஜ் வீசிய ஓவரில் மார்னஸ் எல்பிடபிள்யூ ஆகி இருக்க வேண்டிய ஒரு பந்தை அம்பயர்கள் அவுட் கொடுக்கவில்லை. மேலும் டிஆர்எஸ் முறையிலும் அதற்கு விக்கெட் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி மற்றொரு பெரிய விக்கெட்டாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் ரன் அவுட் ஆனார்.

paine

அஸ்வின் வீசிய 55 வது ஓவரில் ஒரு ரன் எடுக்க முயற்சித்த அவர் ரன் அவுட் ஆனார். ஆனால் அதற்கு களத்தில் இருந்த நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. மேலும் 3வது நடுவர் அவுட் கொடுக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் பெயின் உள்ளே வந்துவிட்டார் என்று அவருக்கு அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ரிப்லேவின்போது பார்க்கையில் பெயின் கோட்டைத் தாண்டாமல் கோட்டின் மீது பேட்டை வைக்கும்போது ரிஷப் பண்ட் ரன் அவுட் செய்தார்.

ashwin 1

சந்தேகத்தின் அடிப்படையில் மூன்றாவது அம்பயரும் இதற்கு விக்கெட் இல்லை என்று அறிவித்ததால் ரகானே சற்று அதிர்ச்சி அடைந்து நடுவரின் தவறான முடிவை பார்த்து வேகமாக சென்று அம்பயரிடம் மைதானத்திலேயே வாக்குவாதம் செய்தார். ஏன் ரன் அவுட் கொடுக்கவில்லை என்பது போல ரகானே கேட்டுக்கொண்டிருக்க அதை கண்ட இந்திய வீரர்கள் சிலரும் நடுவரை பார்த்து கோபமாக சில வார்த்தைகளை உதிர்த்தனர். இந்த செயல் இன்றைய போட்டியில் பெரிய அளவு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisement