பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கோவப்பட்ட ரஹானே – அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பாங்க – விவரம் இதோ

rahane
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.

cup

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு நிருபர் நீங்கள் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக ஆடியதை போன்று இந்தியாவில் உங்களது ஆட்டம் சிறப்பாக இல்லையே ? என கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியால் சற்று கோபம் அடைந்த ரஹானே கூறியதாவது :

இந்த கேள்வி நான் எதிர்பார்த்த ஒன்று தான். நான் அடித்திருக்கும் ரன்களை வைத்து நான் இங்கே பேச விரும்பவில்லை. இருப்பினும் அணிக்கு தேவையான நேரத்தில் நான் ரன் குவிப்பை வழங்கி வருகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையில், எந்த மைதானங்களில் ரன் அடித்து இருக்கிறேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதை கவனித்து இருந்தால் இதுபோன்ற கேள்விகளை நீங்கள் தவிர்த்திருக்க முடியும்.

Rahane-4

மேலும் என்னுடைய அந்த தரவுகளை எடுத்து பார்த்து இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை எழுப்பி இருக்க மாட்டீர்கள். முறைப்படி புள்ளி விவரங்களை தெரிந்துகொண்டு கேள்வி எழுப்புங்கள் என சற்று கோபமான வார்த்தைகளை உதிர்த்தார். நிருபரின் அடுத்த கேள்வியில் இங்கிலாந்து அணியுடனான தொடரில் 5 போட்டிகளில் வெறும் 85 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறீர்கள். இதற்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் ? என கேள்வி எழுப்பினார்.

Rahane 1

அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஹானே : நான் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடு வீரர் கிடையாது. அணியின் தேவைக்கு ஏற்றவாறு விளையாடி வருகிறேன். முதல் போட்டியில் இக்கட்டான நேரத்தில் அரை சதம் அடித்தேன். அதுமட்டுமில்லாது மற்ற அனைத்து வீரர்களுமே பேட்டிங்கில் சிரமப்பட்டு வருகிறார்கள். ரோகிக் மட்டும் சிறப்பான துவக்கம் அளித்துள்ளார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement